Tamilnadu
முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழப்பு... 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் யார்?
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி எரிந்து விழுந்ததில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்காக பல உயர் ராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் இந்த ஹெலிகாப்டரில் சென்றனர்.
ஹெலிகாப்டரில் சென்ற முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய ஒருவர் மட்டும் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் விமானி வருண் சிங் என்றும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஹெலிகாப்டர் கேப்டன் வருண் சிங்குக்கு வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்கப்பட்டுள்ள கேப்டன் வருண் சிங் 2020ஆம் ஆண்டு LCA தேஜாஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் அவருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!