Tamilnadu
“தனியாக செல்லும் பெண்கள் டார்கெட்.. 25 பெண்களிடம் கைவரிசை காட்டிய கொள்ளையன்” : மடக்கி பிடித்த போலிஸார்!
சென்னை அடுத்த பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கலைச்செல்வி அணிந்திருந்த ஏழு சவரன் தங்க நகையைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்திலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. கைதான கார்த்திக், தனியாக செல்லும் கலைச்செல்வியைப் போன்று 25 பெண்களை குறிவைத்து, நகைகளை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்மீது பல குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
Also Read
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?