Tamilnadu
நிவாரண முகாமில் இருந்த மக்களை நெகிழவைத்த போலிஸார்... கொட்டும் மழையில் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்!
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் சென்னையில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மேலும் அதிகளவில் மழை பாதிப்பைச் சந்தித்த பகுதிகளில் இருந்த மக்களை காவல்துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர். இந்நிலையில் அவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்கும் பணியில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சென்னை துரைப்பாக்கம் அருகே இருந்த மக்களை மீட்டு அருகில் இருந்த பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸார், அங்கிருந்த மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அந்த உதவிகளை செய்து கொடுத்து வந்துள்ளனர்.
அப்போது முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மோனிகா ஒன்ற குழந்தைக்கு முதல் பிறந்தநாள் என்று போலிஸாருக்கு தெரியவந்தது. வீட்டில் இருந்தால் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டிய குடும்பத்தினர் முகாமில் சோர்வாக இருந்ததை போலிஸார் உணர்ந்துள்ளனர்.
இதனையடுத்து குழந்தையின் பெற்றோருக்கே தெரியாமல் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட முடிவு எடுத்து, குழந்தைக்கு புத்தாடை, கேக், பலூன் மற்றும் இனிப்புகள், பரிசுப் பொருட்களை வாங்கி வந்து பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடினர். போலிஸாரின் இத்தகைய செயல் முகாமில் இருந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலரும் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
பச்சிளம் குழந்தைகளின் மருந்துக்கு தட்டுப்பாடு; என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை? : கனிமொழி MP!
-
சென்னையில் 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க இளைஞரணி நிர்வாகி கைது!
-
மின்வெட்டே கிடையாதென தமிழ்நாட்டு மக்கள் காதில் பூ சுற்றும் தவெகவின் மெகாவாட் பொய்கள் : முரசொலி தலையங்கம்!
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!