Tamilnadu
"மக்களுக்கான நிவாரணப் பணிகளை உடனே வழங்கிட வேண்டும்": MP,MLAக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்பதால் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என சென்னை மானிலை ஆய்வு மையத் தெரிவித்திருந்தது.
இதையடுத்து நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் விரைந்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்.
இதையடுத்து கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட நிவாரண பணிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!