Tamilnadu

புனீத் மரணம்.. 1,800 மாணவர்களின் கல்விக்காக நடிகர் விஷால் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!

நடிகர் புனீத் ராஜ்குமார் மறைந்த நிலையில் அவரின் உதவி மூலம் படித்து வந்த 1800 மாணவர்களின் இலவசக் கல்வியை தான் ஏற்பதாக நடிகர் விஷார் உறுதியளித்துள்ளார்.

ஆனந்த ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஷார் மற்றும் ஆர்யா நடித்த ‘எனிமி' திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திடைப்படம் தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் வெளியிடுவுள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கில் விளம்பரம் படித்து நிகழ்ச்சியை ‘எனிமி’ படக்குழுவினர் நேற்றைய தினம் தொடங்கி வைத்தனர். அப்போது மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் புகைபடத்திற்கு அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சியை முன்னெடுத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால், “புனீத் ராஜ்குமார் நல்ல நடிகர் மட்டுமல்ல; என்னுடை நல்ல நண்பரும் கூட. அவரைப் போன்ற ஒருபணிவான சூப்பர் ஸ்டாரை நான் இதுவரைக் கண்டதில்லை. அவர் ஏராளமான சமூக நலப்பணிகளை செய்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் புனீத் ராஜ்குமாரிடமிருந்து 1800 மாணவர்களுக்கான இலவசக் கல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்,.

Also Read: கலைஞரிடத்தில் அன்பு கொண்ட புனீத் ராஜ்குமார்... 20 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞரை சந்தித்தது ஏன் தெரியுமா?