Tamilnadu
“சிலை கடத்தலை தடுக்க 3,000 கோவில்களில் ஸ்ட்ராங் ரூம்” : திருக்கோவிலில் பணிகளில் அதிரடி காட்டும் அமைச்சர்!
சென்னை மாதவரத்தில் உள்ள கைலாசநாதர் திருக்கோவில் புதிய திருக்குளம் உருவாக்கும் பணியை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமர குருப்பரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு,”கைலாசநாதர் திருக்கோவிலில் ஏக்கர் கணக்கில் இருக்கின்ற சொத்துக்களில் எவ்வித வருமானமும் வராத நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அதிகபட்சமாக 92 ஆயிரம் ரூபாய்தான் கோவிலுக்கு வருமானமாக வந்துள்ளது.
ஆகவே திருக்கோவில் சார்ந்த இடங்களை தனியார் பயன்படுத்துதல், தனியார் ஆக்கிரமித்து இருக்கின்ற வருமானங்களை முழுவதுமாக அகற்றி திருக்கோயிலுக்கு வரவேண்டிய வருவாயை பெற்று, திருக்கோயிலைச் சார்ந்த அனைத்து பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள இணை ஆணையாளரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற மானிய கோரிக்கையில், 2 கோடி ரூபாய் செலவில் கைலாசநாதர் திருக்கோயில் குளத்தை சீரமைத்து தருவோம் என அறிவித்து அதனடிப்படையில், திருக்குளத்தை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆணையாளர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மண் ஆய்வு பணி முடிந்துவிட்டது வெகுவிரைவில் ஒப்பந்தம் போடப்பட்டு தை மாதத்திற்குள் அந்த பணிகள் துவக்க வேண்டும்.
கைலாசநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் ஏக்கர் நிலம் மாவட்ட ஆட்சியரின் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அந்த சொத்தின் டெபாசிட் தொகையை பெற்றுக் கொள்ளும். மேலும் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற திருக்கோவில்களை முழுவதுமாக புனரமக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 25 கோவில்களின் திருக்குளங்கள் 15 கோடி செலவில் புனரமைக்கும் பணியை கையிலெடுத்து இருக்கிறோம். அடுத்த ஆண்டில் மானியக் கோரிக்கைக்கு முன்பாக அந்த பணிகள் துவங்கப்பட்டு திருக்குளங்கள் மழை நீர் உபரி நீர் தடுப்பதற்கும், அந்த பகுதியின் நிலத்தடி நீர் உயர்வதற்கும் குளங்கள் முக்கிய காரணமாக இருப்பதால் திருக்குளங்கள் முழுவதும் பராமரிக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நிதியாண்டில் ரூபாய் 100 கோடியை ஒதுக்கி உள்ளார். அதை முழுமையாக பயன்படுத்தி அனைத்து திருக்கோவில்களிலும் இருக்கின்ற நந்தவனங்கள் திருத்தேர்கள் முழுமையாக பராமரிக்கப்படும். கடத்தப்பட்ட சிலைகள் மீட்பது நடத்தப்படாமல் சிலைகள் பாதுகாக்கப்படும். கடத்தப்பட்ட சிலை மீட்பது குறித்து தமிழக முதலமைச்சர் சிலை தடுப்பு பிரிவு துறையிடம கலந்தாய்வு மேற்கொண்டு வருகிறார்.
சிலைகள் கடத்தபடாமல் இருப்பதற்கும், தடுப்பதற்கும் 3007 திருக்கோவில்களில் ஸ்ட்ராங் ரூம் ஏற்படுத்தி வருகின்றோம். வெகுவிரைவில் ஓராண்டுக்கு ஸ்டிராங் ரோம் எவ்வளவு முடியுமோ அத்தனையும் ஏற்படுவதனால் முழுவதுமாக சிலைகள் பாதுகாக்கப்படும்.
கார்த்திகை மாதம் தொடங்க இருப்பதால் ஐயப்ப பக்தர்கள் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பக்தர்களுக்கு பண்டிகை நாட்களில் ஏதாவது அவசர தேவை என்றால் அவரது தொடர்பு கொள்வதற்கு உண்டான நல்ல சூழ்நிலையை துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்து பேசி முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நல்ல ஒரு அறிவிப்பாக பண்டிகை நாட்களுக்கு வந்த மிக விரைவில் வெளிவரும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!