Tamilnadu
பக்கோடாவில் கிடந்த பல்லி... நெல்லை மக்கள் பீதி : நடந்தது என்ன?
நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி அருகே ஸ்வீட் ஸ்டால் ஒன்று உள்ளது. இந்தக் கடையில் நேற்று ஒருவர் பக்கோடா வாங்கிச் சென்றுள்ளார்.
பின்னர், வீட்டிற்குச் சென்று பக்கோடா பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் பல்லி இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு வீட்டில் யாரும் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தி இதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது பற்றி அறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஸ்வீட் கடைக்குச் சென்று அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது கடையிலிருந்த குலாப்ஜாமுன் டப்பாவில் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டனர்.
மேலும், விற்பனைக்கு வைக்கப்படும் அனைத்து பண்டங்களிலும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளைக் குறிப்பிட வேண்டும் என கடை உரிமையாளரிடம் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
இதையடுத்து பக்கோடா உள்ளிட்ட சில தின்பண்டங்களைச் சேகரித்து தஞ்சாவூரில் உள்ள உணவு ஆய்வகத்திற்கு அதிகாரிகள் அனுப்பிவைத்துள்ளனர். மேலும் கடையை முழுமையாகச் சுத்தம் செய்துவிட்டு ஒருநாள் கழித்து கடையைத் திறக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஸ்வீட் கடையில் வாங்கிய பக்கோடாவில் பல்லி இருந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!