Tamilnadu
துப்பாக்கி காட்டி வழிபறியில் ஈடுபட்ட ரவுடி... சுற்றிவளைத்துப் பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?
மதுரை மாநகர் சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சரத்குமார். இவர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்துநகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் நடந்து சென்ற ஹரிஹரசுதன் என்பவரைத் துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் மற்றும் தங்கச் செயின் பறித்துள்ளார்.
இதனையடுத்து ஹரிஹரசுதன் அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலிஸார், சுற்றித்திருந்தப் பிரபல ரவுடி சரத்குமாரைக் கைது செய்து அவரிடமிருந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் துப்பாக்கியை வைத்து வேறு ஏதும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா , துப்பாக்கி எங்கு இருந்து வாங்கப்பட்டது. என்பது குறித்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சரத்குமார் மீது கொலை கொலை முயற்சி கொலை வழிப்பறி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!