Tamilnadu
“சனங்ககிட்ட சந்தோசம் இருக்கு..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி குறித்து மனம் திறந்த நடிகர் வடிவேலு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி குறித்து நடிகர் வடிவேலு 27.10.2021 தேதியிட்ட ‘ஆனந்த விகடன்’ வார ஏட்டில் அளித்துள்ள பேட்டியின் கேள்வி பதில் வருமாறு :-
“ஸ்டாலின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீங்க..?”
“அண்ணே... கவனத்துலவைங்க. நான் அரசியல் பேசல. மக்கள் கிட்டே ஒரு சந்தோசம் இருக்கு, சனங்களுக்கு நம்பிக்கை வருது. மக்கள் அவங்களை ஈஸியா அணுக முடியுது. ஸ்டாலின் அய்யா நடைப்பயிற்சி செய்யும்போதுகூட மக்களைச் சந்திச்சுப் பேசுறார். தேவையில்லாம ஒரு வார்த்த பேசுறது கிடையாது. வந்ததும், உட்கார்ந்து கொரோனாவைப் பெருமளவு ஒழிச்சது பெரும் சாதனை. மக்கள் எதைப்பேசினாலும் காது கொடுத்து அக்கறையாக் கேட்டு செய்யறார். சட்டுனுகையை ஆட்டிட்டுப் போயிடலை.
சுகாதாரத் துறையை வச்சிருக்கிற மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை சேகர்பாபுவெல்லாம் அநியாயங்க, நேரத்திற்கு சாப்பிடுவாங்களான்னு தெரியல. எப்ப போனைப் போட்டாலும் அவங்களே எடுக்கிறாங்க. அவங்க பி.ஏ-க்கள் கவலையா இருக்கிறதா கேள்வி. ஒருநாள் சேகர்பாபு அண்ணனுக்குப் போனைப்போட்டு ‘எங்க ஊர் காட்டுப்பரமக்குடி ஐயனார் கோயில் நிலங்கள் இப்ப சாமி கைவசம் இல்லை. மீட்டுக்கொடுங்க’ன்னு சொன்னேன்.
‘புள்ளிவிவரங்களோடு வாங்க’ன்னு சொன்னார். ஊர்ல ஆட்கள் விழுந்தடிச்சு வந்து, இப்ப நில மீட்பு நடந்தாச்சு. நன்றி தெரிவிக்கப்போகணும். மக்களோட சேந்து சாமியே சந்தோசமாயிருக்கு.
இந்த உதயநிதி தம்பி தொகுதியெங்கும் இண்டுஇடுக்கெலாம் சுத்திட்டுத்திரியுறாங்க. இனிமேல் அந்தத் தொகுதி மட்டுமல்ல, எந்தத் தொகுதிலயும் தம்பி அன்னப்போஸ்டாதான் வரும் போல இருக்கு. அதிகாரிகள் எல்லாம் நல்லமனுசங்களா போட்டு ஆட்சி நடக்குது. பெரிய செயலாளராக இறைவனும் அன்பு சேர்ந்த மாதிரி இறையன்பு சார் இருக்காங்க. அவரே பெரிய பேச்சாளர். சைலேந்திரபாபுன்னு கம்பீரமாக அவரும் நல்ல ஆபீசர்.
எல்லோரையும் அரவணைச்சுப் போறதில் ஸ்டாலின் அய்யா முதல்ல நிக்கிறார். தாழ்மையா கேட்டுக்கிறேன். இந்த நல்லாட்சியை அப்படியே நல்லபடியா நடக்க விடுங்க. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ பார்த்து நல்லா வயிறு குலுங்கச் சிரிக்கத் தயாரா இருங்க!”
- நன்றி: ‘ஆனந்த விகடன்’
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!