Tamilnadu
சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. போக்சோ வழக்கில் சிறையில் அடைத்த காவல்துறை!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் காணாமல் போனார். இதுகுறித்து அவரது தந்தை பொன்னமராவதி காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் போனதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி புகார் அளித்தார்.
இந்நிலையில் அதுதொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி 16 வயது சிறுமியை போலிஸார் இன்று மீட்டனர். பின்னர் திருமயம் காவல் ஆய்வாளர் சிமியிடம் விசாரணை நடத்தியதில், வார்பட்டு கிராமம் பாரி நகரைச் சேர்ந்த கணேசன் தன்னை அழைத்துச் சென்றதாகவும், மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெண் அளித்த வாக்குமூலத்தின் படி, கணேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலிஸார் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட கணேசனை திருமயம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் இந்திராகாந்தி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து போலிஸார் கணேசனை அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைத்தனர்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!