Tamilnadu

“செயின் பறிப்பதற்காகவே பைக் ரேஸ் கற்றுக்கொண்ட கொள்ளையர்கள்” : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

மதுரை மாவட்டத்திற்குட்பட்ட செல்லூர், கண்ணனேந்தல், தல்லாகுளம், மூன்றுமாவடி, திருப்பாலை, பேங்க் காலணி ஆகிய பகுதிகளில் பெண்கள் மற்றும் முதியவர்களிடம் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதாக போலிஸாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து வழிப்பறி நடைபெற்ற இடங்களிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஹெல்மெட்டை ஒருவர் ஒரே நாளில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையில் செல்பவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் அந்த இளைஞர் கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த வைரமணி என்பதை போலிஸார் உறுதி செய்து, சென்னையில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். பிறகு அவரிடம் நடத்திய விசாரணையை அடுத்து பாலசுப்பிரமணியன் என்பவரையும் போலிஸார் கைது செய்தனர்.

இவர்களிடம் போலிஸார் நடத்திய விசாரணையில், ஆந்திராவிற்குச் சென்று பைக் ரேஸ் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு மதுரையில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களிடமிருந்த ரூ.33 லட்சம் மதிப்பிலான 90 சவரன் நகைகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தன.

இதுபோன்று மற்ற இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 30 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்தனர். மதுரை மாநகரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேரை போலிஸார் கைது செய்ததற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் ‘பேண்டேஜ்’... சூப்பர் மார்க்கெட்டுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்!