Tamilnadu
"56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" : மின் துறை அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி செய்தி!
தஞ்சாவூர் மாவட்டம், அற்புரதப் புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "ஒவ்வொரு வீட்டிற்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது குறித்தும், மின் கணக்கீட்டாளர் பணி நியமனம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகும்.
மின்கம்பிகள் அறுந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுவது துரதிர்ஷ்டமானது. வரக்கூடிய காலங்களில் இப்படி நடைபெறாமல் இருக்க தரமான மின் கம்பிகள் அமைக்கப்படும்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக மின் நிலையங்களைத் தரம் உயர்த்த ரூ.163 கோடியில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியம் ரூ.1லட்சத்து 56 ஆயிரம் கோடி கடனில் உள்ளது.
எனினும் மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!