Tamilnadu
"ஆவினில் நாட்டு மாட்டுப் பால் மட்டுமின்றி ஆட்டுப் பாலும் விற்கப்படும்" : அமைச்சர் நாசர் தகவல்!
வருங்காலங்களில் ஆவினில் நாட்டு மாட்டுப் பால் மட்டுமின்றி ஆட்டுப் பாலும் விற்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அனைத்துத் துறைகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ற நிலையில், லாபநோக்கில் செயல்படும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.
பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஆவின் பாலை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் என்னிடமோ, ஆவின் நிறுவனத்தின் தொலைபேசி எண்ணிற்கோ மக்கள் புகார் தெரிவிக்கலாம். அதனை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்ற 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆவினில் விரைவில் நாட்டு மாட்டுப்பால் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது அனைத்து வகை சாதி மாடுகளின் பால் ஏ-1 பால் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டு மாட்டுப் பால் விற்பனை செய்தால் அதை ஏ-2 பால் என்று தனியாக விற்பனை செய்யப்படும். இதற்காக தனியாக பால் பாத்திரங்கள், எந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டும். தனி கண்டெய்னரில் இந்த பாலை ஆவின் நிறுவனத்துக்கு கொண்டு வந்து தனியாக பாக்கெட் தயாரித்து விற்க வேண்டும். எனவே நாட்டு மாட்டுப் பால் விலை அதிகமாக இருக்கும்.
மேலும், ஆட்டுப்பாலும் ஆவினில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இதுபற்றி மக்களிடம் கருத்து கேட்டு முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று முடிவு செய்யப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!