Tamilnadu
மன்மோகன் சிங் உடல்நிலை? : எப்படி இருக்கிறார் முன்னாள் பிரதமர் - மருத்துவர்கள் சொல்வது என்ன?
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் நீண்ட காலமாக இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மே மாதம் இதய வலி காரணமாக சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மன்மோகன் சிங் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “காய்ச்சல் மற்றும் உடல்நிலை சீராக இருகிறது. தொடர்ந்து மருத்துவர்கள அவரை கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளனர். மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சியினரும் அவர் குணமடைய வேண்டும் என அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “மாண்புமிகு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் விரைவாகவும் முழுமையாகவும் நலம்பெற விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்,
Also Read
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘ஜெய்சங்கர்’ பெயரில் சாலை! : தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
-
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!
-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! : 20.59 லட்சம் தொடக்கப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர்!
-
”மிரண்டு இருக்கும் நயினார் நாகேந்திரன்” : கடுமையாக சாடிய அமைச்சர் சேகர்பாபு!