Tamilnadu
‘சீக்கிரம் நடங்க பாஸூ’.. குழியில் சிக்கிய யானை குட்டி: 7 மணி நேரம் போராடி தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சரகத்தில் உள்ள தங்கம் சுரங்கம் பகுதியில் உள்ள ஒரு குழியில் குட்டி யானை சத்தம் கேட்டுள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கிருந்த குழியில் பிறந்த ஒரு மாதம் ஆன பெண் யானைக்குட்டி ஒன்று குழியில் சிக்கி இருப்பதை பார்த்த வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழு உதவியுடன் குழியிலிருந்து மீட்டெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து வனப்பகுதி முழுவதும் தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டு சுமார் 7 மணி நேரம் போராடி பிறந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்து வைத்தனர். குட்டியை பார்த்தவுடன் தாய் யானை, பாசத்துடன் ஓடிவந்து குட்டி யானையை அழைத்து சென்றது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Also Read
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!
-
150 ஆவது பொய் - முதுகெலும்பு இல்லாத பழனிசாமியால் இது முடியுமா? : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி?
-
3 நாட்களுக்கு AI & Digital Marketing பயிற்சி... தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் விவரம் உள்ளே!