Tamilnadu
”பேரன் போல நான் இருக்கேன்” - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சால் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் நெகிழ்ச்சி!
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி ஒன்றியம் 10 வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சபியுன்நிஷாவை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி வளநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கவுண்டம்பட்டி, தங்காள் கோவில், வாடிப்பட்டி ஆகிய பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களிடம் திமுக அரசு பொறுப்பேற்ற நான்கு மாதத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பேசினார்.
இதேபோல மீதமுள்ள 303 தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றுவதற்கான ஊக்கத்தையும் உத்வேகத்தையும் நீங்கள் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு அளிக்கப்போகும் வெற்றி மூலம் முதல்வருக்கு ஊக்கம் அளிக்கும் என்றார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண தனித்துறையை அமைத்து அதற்கென தனி கலெக்டரை நியமித்து உங்களது மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்றைக்கு பல லட்சம் மனுக்கள் கோட்டையை நோக்கி சென்றுள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர்களும் பாராட்டும் அரசாக தமிழக அரசின் செயல்பாடு உள்ளது என்று கூறியதுடன் உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய மீண்டும் திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கூறினார். இதேபோல தேசிய ஊரக வேலை உறுது திட்ட பணியாளர்களின் அடையாள அட்டையை பார்த்து பணிக்கு வந்துள்ளார்களா என்றும் ஆய்வு செய்தார்.
இதுமட்டுமின்றி மூதாட்டி ஒருவரிடம் அவரின் வயதை அமைச்சர் கேட்க அந்த மூதாட்டி தெரியவில்லை என கூற பேரன்போல் நானிருக்கிறேன் என்று கூறி, கூடியிருந்த பெண்களிடேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Also Read
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பா.ஜ.க-வின் ஊதுகுழல் அன்புமணி” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!
-
“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!