Tamilnadu
ACTION PLAN, MICRO PLAN: தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட அதிரடியில் தமிழக அரசு; சுகாதார செயலர் தகவல்!
தமிழ்நாட்டில் நடைபெற்ற 4 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் மட்டும் 18% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் :-
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற நான்காவது மெகா தடுப்பூசி முகாமில் 17,19,544 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் 9,68,010 பேருக்கு முதல் தவணையும் 7,51,534 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 4.94 கோடி தடுப்பூசி செலுத்தி உள்ளோம் என்றும் 4 நாட்கள் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மட்டும் 18% விழுக்காடு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது என்றார்.
மேலும் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் மழை காரணமாக சிறிய சுணக்கம் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்டது உண்மை தான் என்றும் மழை காலத்தில் 25 லட்சம் இலக்கை எட்டாவிட்டாலும் 17.19 லட்சம் செலுத்தியது வரவேற்புக்குறியது என்றார்.
தமிழ்நாட்டில் முதியோர்கள் 1.4 கோடி பேர் உள்ளனர். இதில் 42% பேர் முதல் தவணையும் 18% பேர் இரண்டாம் தவணை செலுத்தி உள்ளனர். அடையாள அட்டை இல்லாதவர்கள், வசிப்பிடம் இல்லாதவர்கள், மனநிலை குன்றியவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தி வருகிறோம்.
சில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுணக்கம் உள்ளதாக தலைமை செயலாளர் எழுதிய கடிதத்திற்கு பிறகு ACTION PLAN மற்றும் MICRO PLAN மூலம் உள்ளாட்சி அமைப்பு வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தி வருகிறோம் என்றும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொற்று குறையாமல் இருந்த மாவட்டங்களிலும் தற்போது சற்று தொற்று குறைய தொடங்கி உள்ளது என்றார்.
கொரோனா மட்டும் இல்லாமல் முதலமைச்சர் வழிகாட்டுதல்படி மழை காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வகையான தொற்று நோய்களுக்கும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் பொதுமக்களும் தடுப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
Also Read
-
சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் : சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு !
-
“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முழு மூச்சுடன் பாடுபடுவேன்!” : சென்னையில் நீதியரசர் சுதர்சன் உறுதி!
-
எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் எதிரொலி... ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்க முயன்ற அதிமுகவினர் !
-
"தமிழுக்கு துரோகம் செய்யும் பாஜகவுக்கு கொத்தடிமையாகக் கிடப்பது அதிமுகவின் பழக்கம்" - முரசொலி காட்டம் !
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !