Tamilnadu

மாற்றுத்திறனாளி ஆசிரியரை கிண்டல் செய்து நடனம்: மூவருக்கு டிசி வழங்கிய ராசிபுரம் அரசுப்பள்ளி!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரு தினங்களுக்கு முன், பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரான பன்னீர்செல்வம் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாறு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது பாடத்தை கவனிக்காமல் இரண்டு மாணவர்கள் சினிமா பாடலுக்கு வகுப்பறையில் நடனம் ஆடினார்கள்.

இதை சக மாணவர்கள் வேடிக்கை பார்த்தனர். ஒரு மாணவர் செல்போனில் பதிவு செய்தார். இதை உணர்ந்து கொண்ட ஆசிரியர் பன்னீர்செல்வம் மாணவர்களை அமைதிபடுத்த முயன்றார். ஆனால் மாணவர்கள் ஆசிரியரின் பாடத்தை கவனிக்காமல் தொடர்ந்து ஆட்டம் போட்டனர்.

இதை வீடியோவில் பதிவு செய்த மாணவர் வாட்ஸ் அப் குரூப்களிலும் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ கடந்த இரண்டு நாட்களாக வைரலாக பரவி வந்த நிலையில் மாணவர்களின் நடத்தை குறித்து ஆசிரியர் பல முறை தலைமை ஆசிரியர் குனசேகரனிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் வீடியோவாக வெளியே வந்துவிட்டதால், இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் கூட்டத்தை கூட்டி தலைமை ஆசிரியர் குனசேகரன் விவாதித்தார். அதனை தொடர்ந்து ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட 3 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.

மாணவர்களின் பெற்றோரை அழைத்து 3 பேரின் டிசியை (மாற்று சான்றிதழை) தலைமை ஆசிரியர் குணசேகரன் வழங்கினார். இதனை நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம், மாணவர்களுக்கு டிசி வழங்கப்பட்டதை உறுதிபடுத்தினர்.

Also Read: 3வது திருமணத்திற்கு தடையாக இருந்த குழந்தையை காசுக்கு விற்ற தாய்: குழந்தையை மீட்டு தந்தையிடம் ஒப்படைப்பு !