Tamilnadu
“பாடத்திட்டம் குறைப்பு மற்றும் பள்ளி திறப்பில் மாற்றமா?” : அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய முக்கிய தகவல்!
திருச்சி ரயில்வே ஜங்சன் பகுதியில் உள்ள கதர் கிராம தொழில் வாரிய சிறப்பு விற்பனையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தமிழகத்தில் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது போல நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
பள்ளிகளைத் திறக்க மாவட்ட வாரியாக கல்வித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்த நிலையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொது சுகாதாரத் துறை மருத்துவ வல்லுநர் குழு கருத்துக்களின்படிதான் பள்ளியை திறக்க முடிவு செய்தார். ஆகவே பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் கிடையாது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்படும்.
ஒன்றாம் வகுப்பு மாணவன் வெகுநேரம் முகக்கவசம் அணிந்து இருக்க இயலாது. ஆகவே அது தொடர்பாக பின்னர் ஆய்வு செய்து அதற்குண்டான நேரம் அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில் பிஞ்சு குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்பதே நோக்கம். அந்த அடிப்படையில்தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 98 சதவீத ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பள்ளி கல்வித்துறை ஊழியர்கள் தடுப்பூசி முழுமையாக செலுத்தி இருக்கிறார்கள். பல்வேறு வியாதிகளுக்கு ஆட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மட்டுமே 2 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்த இயலாத நிலையில் இருக்கிறார்கள். பாடத்திட்டம் குறைப்பு என்பது ஏற்கனவே நடைமுறையில் இருப்பதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!