Tamilnadu
மாணவர் விசாவில் சென்னை வந்து துறைமுக சொத்தை சூறையாடிய மோசடி கும்பல்: CBI விசாரணையில் வெளிவந்த ரிப்போர்ட்
சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொகை பணத்தை, கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா என்பவருடன் சேர்ந்து, போலி ஆவணங்கள் வைத்து மணிமொழி என்பவர் மோசடி செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிடப்பட்ட நிலையில், சி.பி.ஐ விசாரணையில் தரகர் மணிமொழி, சென்னை துறைமுக துணை இயக்குனர் எனக் கூறி நடித்த கணேஷ் நடராஜன் மற்றும் இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா உள்ளிட்ட 9 பேர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி சேர்மதி ராஜா, மணிமொழி உள்ளிட்டோரை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சி.பி.ஐ-யின் தொடர் விசாரணையில் மாணவர்களுக்கான விசாவில் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் சென்னை வந்துள்ளதும், அவர்களுக்கு இந்த மோசடியில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள கேமரூன் நாட்டைச் சேர்ந்த பெளசிமோ ஸ்டீவ் பெர்னார்ட் யானிக் மற்றும் காங்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்ஸா இலுங்கா லுசியன் ஆகிய இருவர்தான் ஸ்டூடண்ட் விசாவில் சென்னை வந்து மோசடி விவகாரத்தில் பங்கு கொண்டிருப்பது தெரியவந்தது.
அதனடிப்படையில் சென்னை ராமாபுரத்தில் தங்கியிருந்த அவர்கள் இருவரையும் சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வழக்கில் இதுவரை மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!