Tamilnadu
சேர்ந்து வாழ விரும்பாத மனைவி; தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவர் - சென்னை ஐஸ்ஹவுஸில் பயங்கரம்!
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் கனமொழி. இவரது கணவர் சுப்பிரமணி. வயது 40. திண்டிவனம் கிராண்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடபழனியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சஞ்சய் (3) என்ற ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சென்னையில் கனிமொழி தனது அம்மா நிர்மலாவுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்த சுப்பிரமணி தன்னுடன் வந்து வாழ்க்கையை தொடரும்படி கனிமொழியை அழைத்துள்ளார். அப்பொழுது வீடுவாசல் இல்லாமல் எப்படி அனுப்புவது என கூறி நிர்மலா திருப்பி அனுப்பி உள்ளார்.
நேற்று மீண்டும் வந்த சுப்பிரமணி மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அதிகாலை 1 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வந்த சுப்பிரமணி தகராறு செய்து மனைவி கனிமொழியை அம்மிக்கல்லால் தலையின் பகுதியில் அடித்து கொலை செய்துள்ளார்.
இதில் வாய் மற்றும் மூக்கு வழியாக அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. நாக்கு கடித்த நிலையில் உள்ளது இரண்டு கண்களிலும் காயம் உள்ளது. பக்கத்தில் அறையில் படுத்திருந்த கனிமொழியின் சகோதரி நதியாவின் மகன் சஞ்சய் (13) சத்தம் கேட்டு உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
உறவினர்கள் வந்து கனிமொழியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனைவியை கொலை செய்த சுப்பிரமணி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த கொலை தொடர்பாக ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!