Tamilnadu

“மகாகவி நாள்” : மகாகவி பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !

கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.9.2021) மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு “மகாகவி நாள்”- ஐ முன்னிட்டு, சென்னை , காமராஜர் சாலையில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாண்புமிகு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி கனிமொழி, திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, த.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அதன் தொடர்ச்சியாக பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடக்கத்து.

Also Read: “பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்” : பாரதி குறித்து அண்ணா எழுதி வைத்த குறிப்பு!