Tamilnadu
“நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை” : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் நிலையில் சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனால் அந்த சிறுவனுடன் கடந்த பத்து நாட்களாகத் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தும் பணியில் கேரள சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ராதாகிருஷ்ணன், “கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், தமிழ்நாடு எல்லைப்பகுதிகளில் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எல்லைப்பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்துக் கண்காணித்து வருகிறோம்.
ஏற்கனவே கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டபோது அதை அந்த மாநில அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியது. தற்போதும் கேரளாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் பரவி உள்ள நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!