Tamilnadu
“அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லையா” : அமைச்சர் பொன்முடி விளாசல் !
கடந்த பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ தன் தொகுதிக்கு ஒரு கல்லூரியைக் கூட உருவாக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேள்வி நேரத்தில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் செல்லூர் ராஜூ, “மதுரை மேற்கு தொகுதியில் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அமைத்துத் தர வேண்டும்” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “மதுரை மாவட்டத்தில் 2 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவி பெரும் கல்லூரிகள், 21 சுயநிதி கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 17 தொழில்நுட்ப கல்லூரிகள் இருக்கிறது.
ஆனால், பந்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவரின் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. கேட்பவரிடம் கேட்டால் தான் கிடைக்கும் என்பதை அறிந்த உறுப்பினர் செல்லூர் ராஜூ தற்போது முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறார். இவரின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!