Tamilnadu

“15 நாட்களில் 2 முறை உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலை” : ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

இந்தியாவில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் நாடுமுழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சமையல் எரிவாயு விலையையும் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு உயர்த்தி வருவதால் இது மக்களுக்கு இன்னும் கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.

ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்பு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டது. இதனால் ரூ.875 உலை உயர்ந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிலிண்டர் விலை 900 ரூபாய் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரூ.660க்கு இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 900 ரூபாய் அதிகரித்துள்ளது. எட்டு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 400 ரூபாய் வரை சிலிண்டர் விலையை ஒன்றிய பா.ஜ.க அரசு உயர்த்தியுள்ளது.

அதேபோல், சமையல் சிலிண்டர் மீதான விலையை ஒவ்வொரு மாதமும் உயர்த்துவதன் மூலம் மானியத்தை முற்றிலுமாக ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. கடந்த 7 ஆண்டுகளில் சமையல் சிலிண்டர் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: “யோகி ஆதித்யநாத் பொய் சொல்லுகிறார்” : 2 நாளில் 40 குழந்தைகள் பலி - உண்மையை போட்டுடைத்த பா.ஜ.க எம்.எல்.ஏ!