Tamilnadu
“கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்; முதல்வர் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவார்”: விஷால் பேட்டி!
நடிகர் விஷாலின் பிறந்தாளான இன்று பல்வேறு சினிமா பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். இதனிடையே அவருடைய, ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷார் இன்று செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “வீரமே வாகை சூடும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மேலும், எனது அடுத்த படமும் பூஜையுடன் தொடங்கவுள்ளது. தயவு செய்து போஸ்டர்கள், கட-அவுட்கள் வைக்காதீர்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அந்தப் பணத்தில் இயலாதவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தீர்கள் என்றால் அந்தப் புண்ணியம் எனக்குச் சேருதோ இல்லயோ, உங்கள் குடும்பத்துக்குச் சேரும். இனி திரையுலகிற்கு நல்லது நடக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் நண்பன் உதயநிதி எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகி இருக்கிறார். கண்டிப்பாக திரைத்துறைக்கு நல்லது செய்வார்கள் என முழுமையாக நம்புகிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி கொடுப்பார் என்று தான் மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். தி.மு.க ஆட்சியின் செயல்பாடு மேற்கொண்டு நல்லாயிருக்கும் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் இருக்கிறது.
இது ஏதோ அ.தி.மு.கவுக்கு எதிராகச் சொல்கிறேன் என்று அல்ல. ஹைதராபாத்தில் இருக்கும் போது கூட முதல்வர் மு.க.ஸ்டாலின். உதயநிதியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர் சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
TAPS திட்டத்தை செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு : 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்!
-
“மக்களுக்காக சேவையாற்ற வேண்டும்” : பணி நியமன ஆணை பெற்ற காவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறள் வாரம் : எங்கு? எப்போது? - முழு விவரம் இதோ!
-
நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!