Tamilnadu
ஆன்லைன் ரம்மியால் இன்னொரு பலி: நண்பர்களிடம் கடன்வாங்கி ரூ.7 லட்சத்தை இழந்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞர்!
விழுப்புரத்தை அடுத்த சேந்தனுரைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
பச்சையப்பன் கடந்த சில நாட்களாக செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதால் சுமார் ஏழு லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார்.
இதனால், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் பச்சையப்பன். இதுகுறித்து தனது மனைவியிடமும் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது பச்சையப்பன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பச்சையப்பன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!