Tamilnadu
“சல்லி சல்லியா உடையுது; நொறுங்குது”: ராமாபுரத்திலும் புகார் - முறைகேடுகளால் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக!
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி.பார்க்கில் அ.தி.மு.க ஆட்சியின் போது வீட்டு வசதி வாரியத்தின் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்நிலையில் கட்டிடத்தைத் தொட்டாலே சிமெண்ட் உதிர்ந்து கீழே விழுந்தது குடியிருப்புவாசிகளை அதிர்ச்சியடையச் செய்தது.
கே.பி.பார்க் அடுக்குமாடிக் குடியிருப்பு தரமற்று கட்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் உடனடியாக அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.
மேலும், குடியிருப்பு தொடர்பாகச் சட்டப்பேரவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கட்டிடத்தின் தரத்தையும் ஐ.ஐ.டியின் சிறப்புக்குழு மூலம் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை ராமாபுரத்தில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளும் சிதிலமடைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கே.கே.நகர் கோட்டம் மூலமாக கடந்த 2019ம் ஆண்டு ராமாபுரம் பாரதிசாலையில் 78 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இவை 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் பயனாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இங்கு மக்கள் வசிக்கத் தொடங்கி 2 ஆண்டுகளே ஆகிறது. ஆனால் குடியிருப்பின் கட்டிடத்தைத் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வதாகவும், கட்டிடம் உறுதியில்லாமல் இருப்பதாகவும் குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள கவுள்பாளையம் கிராமத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 504 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டன. ரூ.42 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் தற்போது 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்பிலும் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து சேதமடைந்துள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?