Tamilnadu
அடுத்த ரெய்டு விஜயபாஸ்கர்? - கர்ப்பிணி பெண்களுக்கான திட்டத்தில் கோடிகளில் கொள்ளையடித்த கேடிகள்!
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ‘அம்மா ஊட்டச்சத்து பெட்டகம்’ வழங்கும் திட்டத்தில் டெண்டர் விடப்பட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணையைத் துவக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலன் திட்டத்தின் கீழ், தலா 18 ஆயிரம் ரூபாய் செலவிடும் திட்டம், முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கு பணமாக வழங்குவது போக, 4,000 ரூபாய் மதிப்பில் தாய்க்கும், சேய்க்குமான ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகமும் இரண்டு முறை வழங்கப்படும்.
ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஆவின் நெய் அரை லிட்டர், ஒரு பிளாஸ்டிக் கப், காட்டன் டவல், 200 மில்லி அளவிலான இரும்புச்சத்து டானிக் 3 பாட்டில், புரோட்டீன் பவுடர் 2 பாட்டில், விதை நீக்கப்பட்ட பேரீச்சை அரை கிலோ 2 பாக்கெட், குடல் புழு நீக்க மாத்திரை ஆகியவை இத்தொகுப்பில் தரப்படுகின்றன.
இந்தத் திட்டத்துக்காக 1,001 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் இந்த ஊட்டச்சத்து கிட் மட்டும், ஆண்டுக்கு 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சரின் பினாமி நிறுவனங்கள் புகுந்து விளையாடியிருப்பதாக புகார் கிளம்பியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, அ.தி.மு.க பினாமி நிறுவனங்கள்தான், ஊட்டச்சத்து பெட்டகத்தில் 60 சதவீதப் பொருட்களை வினியோகம் செய்துள்ளன. இதில் ஒவ்வொரு பொருளுக்கும் மிக அதிகமான மதிப்பு குறிப்பிடப்பட்டு, பல நுாறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் சுகாதாரத் துறைக்கு ஊட்டசத்து பெட்டக பொருட்களை விநியோகம் செய்த நிறுவனங்களின் பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில் பெரும் முறைகேட்டுக்கு காரணமான முன்னாள் அமைச்சர் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!