Tamilnadu
அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி; ரூ.18 லட்சத்தை சுருட்டிய விராலிமலை அதிமுக நிர்வாகி கைது!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ். இவர் விராலிமலை மேற்கு ஒன்றிய அதிமுகவின் சிறுபான்மையர் அணி பிரிவு செயலாளராக இருந்து வந்துள்ளார்.
ஜேசுராஜீம் அவரது மனைவி அனுஷா ஆகிய இருவரும் சத்துணவு துறையில் தனது மனைவிக்கு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக ரூ 6 லட்சம் மோசடி செய்து விட்டதாக மூன்று நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணி என்பவர் விராலிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஜேசுராஜ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த விராலிமலை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மனைவி அனுஷாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜேசுராஜுவை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் ஜேசுராஜ் சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக விராலிமலை பகுதியை சேர்ந்த 7 பேரிடம் 18 லட்ச ரூபாயை மோசடி செய்துவிட்டதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு.
அப்போது பாதிக்கப்பட்ட நபர்கள் கூறுகையில்: ஜேசுராஜ் அதிமுகவில் பொறுப்பில் இருந்ததால் கடந்த 2019ஆம் ஆண்டு சத்துணவு துறையில் வேலை வாங்கி தருவதாக தங்களைப் போன்ற பலரிடமும் பல லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாகவும் பணத்தை திரும்ப கேட்ட போது அவர் மிரட்டல் விடுத்ததால்தான் காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணத்தை பெற்றுத் தர வழிவகை செய்ய வேண்டும் எனவும் கூறினர்.
Also Read
-
மார்ச் மாதத்தில் கேரளா வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி... உறுதி செய்து வந்த E-Mail !
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!