Tamilnadu
கொடியேற்ற வாய்ப்பளித்த தமிழக மக்களுக்கு நன்றி: கோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (Album)
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அந்த வகையில், சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கோட்டைக்கு சென்றடைந்தவுடன் திறந்தவெளி வாகனத்தில் நின்று முப்படைகளின் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரை தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் 75-வது சுதந்திரத் திருநாளையொட்டி நடைபெற்ற காவல்துறையின் அணிவகுப்பினை பார்வையிட்டார். பின்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசியக்கொடி ஏற்றிவைத்து, தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு, டாக்டர் அ.ப.ஜெ. அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் சிறப்பு விருது மற்றும் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசின் விருதுகளையும், பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதேப்போல், கோவிட் - 19 தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !