Tamilnadu
“சாதி ரீதியாக தாக்குதல்... சமூக பதட்டத்தை உருவாக்கும் மீரா மிதுன்" : கைது செய்யக்கோரி போலிஸில் புகார்!
பிக்பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமானவர் மீரா மிதுன். இவர் தன்னை பிரபலமாகக் காட்டிக் கொள்வதற்கான நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து தனது சமூக வலைதளத்தில் சர்ச்சையாகப் பேசுவதை வழக்கமாக வைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இந்த சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் திரை பிரபலங்கள்தான் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்தவேண்டும் எனவும் மிக இழிவாகப் பேசியுள்ளார்.
இவரது இந்தப் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே திராவிட விடுதலை கழக மாவட்டச் செயலாளர் மா.பா.மணி அமுதன் மீரா மிதுனை கைது செய்யக் கோரி மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அவரது புகாரில், "மீரா மிதுனின் வீடியோ சமூக பதட்டத்தை உண்டாக்கும் விதமாக உள்ளது. எனவே அவரை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செய்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
உலகளவில் விளையாட்டுகளில் பதக்கங்கள்... அள்ளிக்குவித்த தமிழக வீராங்கனையருக்கு முதல்வர் ஊக்கத்தொகை!
-
“உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று எதிரிகள் புலம்புகிறார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“தமிழ்ப் பெண்களை, வெல்லும் பெண்களாக மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!