Tamilnadu
Engg, IT படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள்; புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட படிப்புகள் என்னென்ன?
கொரொனா கால கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் நிலையில், வேலை வாய்ப்பை பெற்று தரும் படிப்பு எவை, மாணவர்கள் தங்கள் தகுதியை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து பொறியியல் துறை வல்லுநர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.
பெரும்பாலான மாணவர்கள் இந்த ஆண்டு நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். ஆகவே பொறியியல் துறையின் கட்-ஆப் மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொறியியல் துறையில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதற்கேற்ப BE computer science artificial intelligence data science, BE Cyber security, BE computer science and medical engineering போன்ற துறை சார்ந்த பிரத்யேக படிப்புகளும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
பொறியியலில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் அதிக வேலைவாய்ப்புகள் தரும் துறை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மாணவர்கள் எந்த பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தாலும் பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பொறியியல் துறையில் வேலை வாய்ப்பு பெற்று பரிணமிக்க முடியும். National Programme for Technology Enhanced Learning (NPTEL) என்ற, ஐ ஐ டி நிபுணர்களின் பிரத்யேக தேசிய அளவிலான ஆன்லைன் பயிற்சிகளில் சேர்ந்து , மதிப்பெண்களை தங்களின் துறையில் இணைத்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
தமிழில் ஆர்வம் உள்ள மாணவர்கள், தங்கள் விருப்பத்திற்கேற்ப, படிக்க ஏதுவாக நற்றமிழ் என்ற படிப்பு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!