Tamilnadu
சென்னையில் செயல்பாட்டுக்கு வந்தது ஜிகா வைரஸ் கண்டறியும் சோதனை மையம் - வருமுன் காக்கும் தி.மு.க அரசு!
சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரத்துறை இயக்குனரக அலுவலக வளாகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட துவங்கியது.
இதுவரை 65 இடங்களில் கொசுக்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் எதிலும் ஜிகா வைரஸ் தொற்று இல்லை என பொது சுகாதாரத் துறை தகவல்.
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழக எல்லை பகுதி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் ஜிகா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடுகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது.
அதன்படி வழக்கமான பரிசோதனைகளான எலிசா பரிசோதனையைத் தொடர்ந்து பிசிஆர் பரிசோதனையிலும் ஜிகா வைரஸ் கண்டறிய தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு சுகாதாரத் துறை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்தியுள்ளது.
இதுவரை கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் 65 இடங்களில் சேகரிக்கப்பட்ட ஏடிஸ் கொசுக்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த மாதிரியிலும் ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கபடவில்லை என தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?