Tamilnadu

போலி பட்டாக்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு!

மக்கள் நல திட்டங்களை மேற்கொள்ள அரசுக்கு நிலம் தேவைப்படுகிறது. போலி பட்டாக்கள் வழங்கி இருந்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் ராமச்சந்திரன் வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்:-

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளுடன் பட்டா வழங்குதல், தொடர்பாக முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட கூடாது விரைந்து பட்டா வழங்கபட வேண்டும் மற்றும் போலி பட்டா வழங்கபட்டிருந்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசின் திட்டங்கள் மேற்கொள்ள நிலங்கள் தேவைப்படுகிறது.

பிற துறைகள் சார்ந்த ஆக்கிரமிப்பு நிலங்களை கையக்கப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுளோம். அரசு நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் அவற்றை விரைந்து கையகப்படுத்த வேண்டும்.

அரசு இடங்களில் உள்ள குத்தகைதாரர்கள் பல பேர் பணம் கட்டவில்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது. அவர்களுக்கு 15 நாட்கள் நோட்டீஸ் கொடுத்து , பணத்தை கட்ட வைக்கவும் மறுக்கும் பட்சத்தில் குத்தகையை ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீர் நிலை, புறம்போக்கு ஆக்கிரமிப்பை காலி செய்ய வேண்டும். ஆவணங்களில் உள்ள பழைய நடைமுறைகளை மாற்றி , பட்டா விரைவாக கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெரும்பாலான மனுக்கள் வருவாய் துறைக்குதான் வந்துள்ளது. தயவு தாட்சண்யம் பாக்கமல் போலி பட்டாக்களை கண்டறிந்து, நோட்டீஸ் கொடுத்து முறையாக அந்த நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் RDO அந்தந்த பகுதிகளில் உள்ள பட்டாவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொடுக்க அறிவுறுத்தபட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கே குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை கட்ட அரசு அனுமதி வழங்கும் திட்டம் உள்ளது.

அரசு நிலங்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் சட்டத்திற்கு உட்பட்டு முதல்வரிடம் கலந்து பேசி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Also Read: முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்ட ALCAZAR கார் யாருக்கு விற்பனை? : Hyundai நிறுவனம் வெளியிட்ட தகவல்!