Tamilnadu

“ஆளுநர் உரை வெறும் ட்ரெய்லர்தான்.. முழு திரைப்படத்தை பட்ஜெட்டில் காணலாம்” : பேரவையில் முதலமைச்சர் பேச்சு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உறுப்பினர்கள் வைத்த வாதம், எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்து உரையாற்றினார்.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு: “கடந்த 2 நாட்களாக தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, பா.ம.க, வி.சி.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினார்கள். அந்தப் பிரச்சினைகளைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குறித்து வைத்துள்ளனர். துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆட்சி குறித்து ஆளுநர் உரையில் மட்டும் முழுமையாகச் சொல்ல முடியாது. ஆளுநர் உரை என்பது அரசாங்கத்தின் ஓராண்டுக்கான கொள்கை விளக்கச் சுருக்கம். அதில், அரசின் 5 ஆண்டுகளுக்கான நோக்கம், திட்டம், செயல்பாடுகள், அணுகுமுறைகளை விளக்கிவிட முடியாது.

ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம்தான். புரியக்கூடிய வகையில் சொல்லப்போனால், இது ஒரு ட்ரெய்லர்தான். முழுத் திரைப்படத்தை வெள்ளித்திரையில் காணலாம் என்பதுபோல, அரசின் பாதை, இடர்ப்பாடுகள், அவற்றைக் களைந்தெறியும் சூட்சுமம் ஆகியவை விரையில் இந்த அவையில் வைக்கப்படவுள்ள பட்ஜெட்டில் இடம்பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தி.மு.க யாராலும் அடக்க முடியாத யானை” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!