Tamilnadu
காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது..
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சூரங்குடி துவரந்தை பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் பாலமுருகன் (25), 8ம் வகுப்பு வரை படித்துள்ள பாலமுருகன் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
அதை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுமியிடம் அண்ணன் என்ற பெயரில் பாலமுருகன் பேச தொடங்கியுள்ளார். நாள்கள் செல்ல, செல்ல சிறுமியிடம் செல்போன் எண் வாங்கி, அவரை காதலிப்பதாக பாலமுருகன் தெரிவித்துள்ளார். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சகோதரன் என்று கூறியதால் தான் பேசினேன் இல்லையென்றால் பேசி இருக்கமாட்டேன் என்று சிறுமி தெரிவித்துள்ளார். ஆனாலும் பாலமுருகன் விடமால் தன்னை காதலிக்கும் படி சிறுமிக்கு தொந்தரவு தந்துள்ளார். இந்நிலையில், நேற்று தன்னை காதலிக்கவில்லை என்றால், சிறுமி குளியலறையில் குளிக்கும் போது மறைமுகமாக வீடியோ எடுத்து வைத்து இருப்பதாகவும், அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றினை கூறியுள்ளார். இதையெடுத்து சிறுமியின் தந்தை பாலமுருகன் வீட்டிற்கு சென்று இது குறித்து கேட்டுள்ளார். அப்போது பாலமுருகன், அவரது தந்தை பழனிச்சாமி, தாய் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து சிறுமியின் தந்தையை தாக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலிஸார் வழக்கு பதிவு செய்து பாலமுருகன், அவரது பெற்றோர் பழனிசாமி, மாரியம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பழனிசாமி, மாரியம்மாள் இருவரையும் மட்டும் போலிஸார் ஜாமீனில் விடுவித்தனர். பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
நெல்லையில் ரூ.56.36 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!