Tamilnadu
“பாகன்கள் முயற்சியால் சாதுவாக மாறிய யானை” : வனத்துறையை திணறடித்த சங்கர் யானை பற்றிய சிறப்பு தொகுப்பு !
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது பந்தலூர் தாலுகா. இந்த பகுதியில் கடந்த ஜனவரி மாதம் கேரளாவிலிருந்து வந்த யானை ஒன்று விளை நிலங்களில் சேதம் செய்து. மேலும் கிராம பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது.
அத்துடன், தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேரை ஒரே வாரத்தில் அந்த யானை கொன்றது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் ஆட்கொல்லி யானையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டபோது. மூன்று பேரை கொன்ற யானை, கேரளாவில் இருவரைக் கொன்று, கேரளா வனத்துறையினரால் தேடப்பட்டசுல்லி கொம்பன் சங்கர் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு வனத் துறையினர் மற்றும் கேரளா வனத்துறையினர் கூட்டாக சேர்ந்து சங்கர் ஆட்கொல்லி யானையை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆட்கொல்லி யானை சங்கர் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைகளில் மாறிமாறி சென்று வனத்துறையினருக்கு ஆட்டம் காண்பித்து வந்தது.
இதயடுத்து, 60 நாட்களுக்கு பின்பு கேரளாவில் இருந்து மீண்டும் இரண்டு பெண் யானைகளுடன் தமிழ்நாட்டிற்கு வந்த ஆட்கொல்லி யானை சங்கரை, பிடிக்க 5 கும்கி யானைகள் உதவியுடன் , இரண்டு கால்நடை மருத்துவர்கள், 60 வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு, பகலாக யானை கண்காணிக்கும் பணியில் முயற்சி மேற்கொண்டு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக வனத்துறையினர், கால்நடை மருத்துவக் குழு உதவியுடன் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.
பிறகு, பிடிபட்ட சங்கர் யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் கரோல் எனப்படும் தனியாக மர கூண்டு அமைத்து அதில் அடைத்தனர். அடுத்த சில நாட்களில் கூண்டை உடைத்து சங்கர் யானை வெளியே வர முயற்சி மேற்கொண்டது.
பின்னர், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழங்குடியின இனத்தைச் சேர்ந்த யானை பாகன்கள், ஆட்கொல்லி யானை சங்கருடன் நெருங்கிப்பழகி கோப குணத்தை மாற்றினர். தற்போது சங்கர் யானை சாதுவாக மாறியுள்ளது.
மேலும், யானை பாகன்கள் இடும் கட்டளையை மதித்து, அதன் படி நடககிறது. அதுமட்டுமில்லாமல் அவர்களுடன் நெருங்கி பழகி வருகிறது சங்கர் யானை. ஆறு மாதங்களுக்கு முன்பு மனிதர்களைக் கண்டால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்தி வந்து கொன்ற இந்த யானை தற்போது அவர்களின் கட்டளைக்கு கீழ்படிந்து மாறி உள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.
தற்போது மர கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் ஆட்கொல்லி யானை சங்கர் விரைவில் விடுவிக்கப்பட்டு கும்கி பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு கும்மிக்கி பயற்சி மேற்கொள்ளும் இந்த யானை சங்கர் , விரைவில் ஒரு ராணுவ வீரனைப் போல கிராம பகுதிக்குள் மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகளை விரட்டும் பணிக்கு தமிழ்நாடு முழுவதும் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆறு மாதங்களுக்கு முன்பு மனிதர்களைக் கண்டால் விரட்டி விரட்டி கொன்ற ஆட்கொல்லி யானை சங்கர் இன்று அதே மனிதர்களின் கட்டளைக்குக் கீழ் படிந்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!