Tamilnadu

'இலக்கிய மாமணி விருது - கனவு இல்லம்' : எழுத்தாளர்களை வியப்பில் ஆழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் !

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும். ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில விருதுகளை பெறும் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு 6 அறிவிள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு :-

இலக்கிய மாமணி விருது துவக்கம்!

இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், 'இலக்கிய மாமணி' என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும்.

கனவு இல்லம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்” எனத் தெவித்துள்ளனர்.

முதல்வரின் இந்த அற்புத அறிவிப்புகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம், கலை இலக்கிய பெருமன்றம் உள்ளிட்ட எழுத்தாளர் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளில் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகளை சமூக வலைத்தளங்களில் எழுத்தாளர் சமூகம் கொண்டாடி வருகிறது.

Also Read: “மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்” : அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!