Tamilnadu
“கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றி கணக்கெடுப்பு பணி துவங்கியது” : அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்று தனியாக அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து, அங்குள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், “தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென்று, அன்பு ஆசிரமம், லசால் பள்ளி, முகத்துக்குவியல் குழந்தைகள் மையம், அடைக்கலாபுரம் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஆகிய நான்கு இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 361 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த மையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்குக் கல்வி செலவை முழுவதும் அரசு ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குழந்தைகள் குறித்துக் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 72 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து வருவாய்த் துறை மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தற்போது குழந்தை திருமணங்கள் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊராட்சி அளவிலான குழு அமைத்து குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்” என தெரிவித்தார்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!