Tamilnadu
12 நாட்களில் 500 ஆக்சிஜன் படுக்கைகள்... சேலத்தில் அரசு மருத்துவமனைக்கு நிகரான கொரோனா சிகிச்சை மையம்!
சேலம் இரும்பாலை வளாகத்தில் பன்னிரண்டே நாட்களில் 500 ஆக்சிஜன் படுக்கையுடன் அமைக்கப்பட்ட கொரோ சிறப்புச் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்துவைத்தார்.
தற்போது இந்த சிறப்புச் சிகிச்சை மையம் கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் என்ன கட்டமைப்பு வசதி இருக்குமோ அது அனைத்தும் அங்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், "500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த சிறப்பு மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
அரசு மருத்துவமனை எந்த கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதோ, அதுபோலவே இந்த சிறப்பு மையமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் மற்றொரு சிறப்பு கொரேனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்று 21 நாட்களிலேயே பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!