Tamilnadu
ஈரோட்டில் ₹7.5 கோடி மதிப்பில் 400 O2 படுக்கைகள்: புதிய கட்டுமான பணியை தொடக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முற்றிலுமாக கொரானா நோய் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கூடுதலாக 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றது. 400 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டட கட்டுமான பணிகளை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சா் சு. முத்துசாமி தொடங்கி வைத்தார்
பின்னர் அமைச்சர் இது குறித்து பேசும் போது பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியானது கொரொனா தொற்று ஏற்பட்டவா்களுக்காக முழுமையாக இயங்குகிறது. அன்டை மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக இங்கு வருவதால் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து படுக்கைகள் அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
இங்கு துவங்கப்பட்டுள்ள பணிகள் ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன், 400 படுக்கைகள் கொண்ட முற்றிலும் ஆக்சிஜன் வசதி கொண்ட சிறப்பு மருத்துவ வளாகம் அமைக்கப்படவுள்ளது.
கொரோனோ தீவிர தாக்கம் உள்ள இக்கால கட்டத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளே அதிகம் தேவைப்படுகிறது. இக்கட்டடமானது நவீன தொழில்நுட்பத்தில் ஒரு மாத காலத்திற்குள் கட்டி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
Also Read
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!
-
யோக்கியர் வேஷம் போடும் பழனிசாமி : அ.தி.மு.க ஆட்சி ஊழலை மீண்டும் நினைவூட்டும் முரசொலி!