Tamilnadu
45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி !
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாள்தோறும் பல்வேறு கட்டடங்கள் மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக பொதுமக்களும் நன்கொடையாளர்களும் தங்களால் இயன்றதை தாராளமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்க முன் வரவேண்டும் என அண்மையில் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி மே 17ம் தேதி வரை இணைவழியில் ரூ.29.44 கோடி, நேரடியாக ரூ. 39.56 கோடி என மொத்தமாக ரூ. 69 கோடி நிதி பெறப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் விரிவாக்கத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவஞானம் தனது 45 ஆண்டுகால சிறு சேமிப்பான ஒரு லட்சத்தை மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தார்.
அதேபோல் பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த சித்த வைத்தியர் நா.கு.கண்ணப்பர் என்ற முதியவர் ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடையாக மாவட்ட ஆட்சியரிடம் மகேஸ்வரி இடம் அளித்தார்.
மேலும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வரும் மேன்டோ தொழிற்சாலை சார்பாக தொழிற்சாலையின் சமூகப் பங்களிப்பு நிதியிலிருந்து 2 மருத்துவ அவசர ஊர்தி வாகனங்கள் மற்றும் 10 ஆக்ஸிஜன் உபகரணங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல்வேறு நபர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை காசோலையாகவும் நேரடியாகவும் வங்கிக் கணக்கிலும் செலுத்தி வருகின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!