Tamilnadu
போலிஸாரை தாக்கிய வாலிபருக்குத் தர்ம அடி.. மடக்கிப்பிடித்து போலிஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள் !
சென்னை, அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் சரவணன்). இவர் நேற்று இரவு பாடி, கோல்டன் காலனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் நடந்து வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து, சரவணன் அந்த வாலிபரை வழிமறித்து விசாரணை நடத்தினார். அப்போது, வாலிபர் திடீரென்று சரவணன் முகத்தில் சரமாரியாக கைகளால் குத்தியுள்ளார்.
இதில், அவருக்கு வலது கண் புருவத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர், பொதுமக்கள் வாலிபரை கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், படுகாயமடைந்த போலீஸ் ஏட்டு சரவணனை பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகாரின் அடிப்படையில் கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வாலிபர் பாடி, வன்னியர் தெருவைச் சார்ந்த தினேஷ்குமார் என்பது தெரியவந்தது.
மேலும், போலீசார் அவரை கைது செய்து இன்று அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர், போலீசார் நீதிபதி உத்தரவின் பேரில் அவரை திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.
Also Read
-
சென்னையில் ரூ.5.10 கோடி செலவில் குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத்தளம்! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
அனுமனை அறிவியலோடு ஒப்பிட்டு சர்ச்சை கருத்து! : பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூருக்கு எழும் கண்டனங்கள்!
-
"ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தினால் 3 முதல் 10 ஆண்டு வரை சிறை" - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை !
-
நீதித்துறை குறித்த அமித்ஷாவின் சர்ச்சை கருத்து.... பொங்கி எழுந்த 18 முன்னாள் நீதிபதிகள்... விவரம் என்ன ?
-
“மக்களுக்கான திட்டங்களை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு!” : TOI நாளிதழுக்கு முதலமைச்சர் சிறப்பு கட்டுரை!