Tamilnadu
முதல் பிறந்த நாளை கொரோனா முகாமில் கொண்டாடிய குழந்தை; திருவண்ணாமலை அருகே நெகிழ்ச்சி சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ராஜமாபுரம் கிராமத்தை சேர்ந்த இளம் தம்பதி மற்றும் அவர்களது ஆண் குழந்தைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர்கள் சேத்துப்பட்டில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு கொரோனா வார்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது. அப்போது அந்த இளம் தம்பதியினர் 10ம் தேதி எங்கள் குழந்தைக்கு முதல் பிறந்த நாள். இதை சிறப்பாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிறந்தநாள் கொண்டாட முடியவில்லை என கூறியுள்ளனர். இதைக்கேட்ட மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர், மருத்துவ அலுவலர் பிறந்த நாள் கேக் மற்றும் இனிப்புகளுடன் வந்து உங்கள் குழந்தையின் பிறந்தநாளை இங்கேய கொண்டாடுவோம் என கூறி பெற்றோரையும், கொரோனா வார்டில் இருந்தவர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, அங்கிருந்த செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினருடன் சேர்ந்து அந்த தம்பதி தங்களது குழந்தையின் முதல் பிறந்த நாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!