Tamilnadu

இரவு ஊரடங்கு அமல்: சென்னை - இதர மாவட்டங்களுக்கான கடைசி பேருந்து விவரங்கள் இதோ! #CoronaCrisis

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதி தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும், நாள்தோறும் இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரையில் ரயில் சேவை நீங்கலாக எந்த பொது போக்குவரத்துக்கும் அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கடைசி பேருந்து புறப்படும் நேரம் தொடர்பான விவரங்களை இங்கே காண்போம்.

Also Read: இரவு 9க்கு தொடங்கி 10க்கு தாம்பரத்தில் நிறுத்திடுவீங்களா? பயணிகள் கேள்வியால் போக்குவரத்து கழகம் முடிவு!

சென்னை - நாகர்கோவில் காலை 7 மணி

சென்னை - கன்னியாகுமரி காலை 6 மணி

சென்னை - திண்டுக்கல் காலை 10 மணி

சென்னை - காரைக்குடி காலை 11 மணி

சென்னை - தஞ்சாவூர் நண்பகல் 1 மணி

சென்னை - கும்பகோணம் காலை 7.30 மணி

சென்னை - நெல்லை காலை 8 மணி

சென்னை - திருச்செந்தூர் காலை 8 மணி

சென்னை - தூத்துக்குடி காலை 8 மணி

சென்னை - செங்கோட்டை காலை 8 மணி

சென்னை - சேலம் நண்பகல் 1.30 மணி

சென்னை - கோவை காலை 10.30 மணி

சென்னை - மதுரை நண்பகல் 12.15 மணி

Also Read: “கொரோனா தடுப்பூசிகள் இனி கார்ப்பரேட் கையில்” : 1000 ரூபாய்க்கு விற்கப்படும் விபரீதம்!