Tamilnadu

சானிடரி நாப்கின் பேரில் போலி பில் போட்டு ₹44.15 கோடி முறைகேடு - சுகாதாரத்துறையின் மெகா ஊழல் அம்பலம்!

அ.தி.மு.க. அரசில் எந்தப் பக்கம் பார்த்தாலும், ஊழல், நிர்வாக சீர்கேடுதான், சானிடரி நாப்கின் இலவசமாக வழங்கும் திட்டம் நடைமுறையில் இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சானிடரி நாப்கின் பெயரில் போலி பில் போடப்பட்டு, கோடிக்கணக்கில் ஊழல் நடந்து வருகிறது.

சட்டமன்றத்தில் கிராமப்புற வளரும் இளம் பெண்களுக்கு இடையே தன் சுத்தத்தை ஊக்குவிக்க மாதவிடாய் கால தன் சுகாதாரத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் ரூ.37.47 கோடி செலவில் நகர் புறத்தில் பயிலும் பள்ளி மாணவியர்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.

மேலும் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு சானிடரி நாப்கின் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2012-13ல் அரசு மனநோயாளி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் 525 பேருக்கு 9,450 சானிடரி நாப்கின் ரூ.2.36 இலட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டு, வழங்கப்பட்டது.

ஆனால் இந்த திட்டம் தொடரவில்லை. 08.12.2017ல் சானிடரி நாப்கின் ரூ.11.82 கோடிக்கு கொள்முதல் செய்து வழங்கப்பட்டதாக, அரசாணை வெளியானது. சட்டமன்றத்தில் கொரோனா முழு ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்படும் 24.03.2020ல் சானிடரி நாப்கின் ரூ.44.15கோடி செலவில் வழங்கப்பட உள்ளதாக, அரசாணை வெளியானது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 14,91,974 மாணவிகளுக்கும், அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளியாக இருக்கும் 73,51,628 பெண்களுக்கு ரூ.44.15 கோடியில் சானிடரி நாப்கின் 2020-21ல் வழங்கப்பட்டதாக கோப்புகளில் மட்டும் உள்ளது.

ஆனால் அரசு மருத்துவமனைகளில் 73.51 சதவீதம் பெண்கள் உள் நோயாளியாக சிகிச்சை பெறுகிறார்கள் என்பதே அதிர்ச்சியான தகவல்களாக உள்ளது. நாம் புலனாய்வு செய்த வரையில் சானிடரி நாப்கின் கொள்முதல் செய்து வழங்கப்படவில்லை.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளராகப் பணியாற்றி மாறுதல் செய்யப்பட்ட பீலா ராஜேஸ்தாஸ் ஐ.ஏ.எஸ். தற்போது சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ராதா கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மூவர் அணி மூலம் சானிடரி நாப்கின் பெயரில் மெகா ஊழல் நடந் துள்ளது.

இது தொடர்பான குறிப்புக் கோப்புகளில் பல சந்தேகங்களை நிதித்துறை எழுப்பி உள்ளது. ஆனால் அந்த சந்தேகங்களுக்கு பதில் நிதித்துறைக்கு கிடைக்கவில்லை. ஆனால் நிதித்துறை நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. சானிடரி நாப்கின் பெயரில் ரூ.44.15 கோடிக்கு மெகா ஊழல் நடந்துள்ளது உறுதியாகி உள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சானிடரி நாப்கின் கொள்முதல் செய்த விவரங்கள், சப்ளை நிறுவனத்தின் விவரங்கள், சப்ளை செய்யப்பட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை வெளியிடுவாரா....?

Also Read: சென்னை ஆணையர் பிரகாஷ் வீட்டில் பண மூட்டைகள் பதுக்கல்; அரசு வாகனங்களில் வைத்து அதிமுகவினர் பட்டுவாடா!