Tamilnadu

“ஊழலுக்காக கலைக்கப்பட்டது தி.மு.க ஆட்சி என நிரூபிக்க தயாரா?” : முதல்வர் எடப்பாடிக்கு ஆ.ராசா சவால் !

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன்நகரில் மாதவரம் சட்டமன்ற தி.மு.க வேட்பாளர் சுதர்சனத்தை ஆதரித்து தி.மு துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய ஆ.ராசா, தமிழகத்தில் இருவர் தற்போது மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வருவதாகவும், ஒருவர் ஜெயலலிதா ஆட்சியை தொடர வாய்ப்பு தருமாறும், மற்றொருவர் 10 அண்டு காலம் இருண்டுள்ள தமிழகத்தை வெளிச்சத்தை கொண்டு வர வாக்களிக்குமாறு வாக்கு கேட்பதாக கூறினார்.

எடப்பாடி பழனிசாமி எப்படி அரசியலுக்கு வந்தார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். ஊழலுக்காக கலைக்கப்பட்டது தான் தி.மு.க அரசு என பேசி வரும் எடப்பாடி பழனிசாமி ஏதேனும் ஆவணங்களை கொண்டு அதனை நிரூபிக்க தயாரா ?. பழனிசாமி அதனை நிரூபித்தால் அவர் எங்கு எந்த வாகனத்தில் இருந்தாலும் அங்கேயே வந்து நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். தவறும் பட்சத்தில் அண்ணா அறிவாலயத்தில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு முதல்வர் பழனிசாமி தயாரா என சவால் விடுத்தார்.

எமெர்ஜெண்சி காலத்தில் இந்திரா காந்தியை ஆதரிக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதாக கூறினார். எடப்பாடி பழனிசாமிக்கு வரலாறும் தெரியாது எனவும் அவருக்கு வரலாறும் கிடையாது என்றார். எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு முன் யாருக்காவது தெரியுமா எனவும் அவர் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது கூட அவரை யாருக்கும் தெரியாது. பாம்பு, பல்லியாக இருந்து ஊர்ந்து போனால் பரவாயில்லை, மனிதனாக இருந்து ஊர்ந்து போய் பதவியை பெற்றதாக சாடினார்.

4,500 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகளை செப்பனிட உலக வங்கி கொடுத்த நிதியை முறைகேடாக சம்மந்திக்கு டெண்டர் கொடுத்ததாக நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடுத்ததாகவும் ஆனால் எடப்பாடி பழனிசாமியோ டெண்டர் வழங்கியவருக்கு எனக்கும் உறவினர் இல்லை எனவும், அவரது மகளை எனது மகன் திருமணம் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதாக கூறினார். இதைவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழலுக்கு வேறு ஆதாரம் வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.

Also Read: “கடைசிநேரம் வரை காவிரி பிரச்சினையில் துரோகம் செய்ததுதான் பழனிசாமி அரசின் சாதனை”: முரசொலி தலையங்கம் சாடல்!