Tamilnadu
“3,500 இந்து கோவில்கள் புதுப்பிக்கப்பட்டது தி.மு.க ஆட்சியில் தான்” : ஐ.லியோனி பேச்சு!
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட கூடிய க.செல்வராஜை ஆதரித்து பல்வேறு இடங்களில் திண்டுக்கல் ஐ.லியோனி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து அதிமுக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் செய்தியாளர் சந்திப்பில் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை கசிந்து விட்டதாக நாடகம் ஆடுகிறார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும் பா.ஜ.க தமிழக மக்களை ஏமாற்றி வருவதாகவும் உண்மையிலேயே இந்துக்களுக்கு நல்லது செய்த ஆட்சியாக தி.மு.க ஆட்சி இருந்து இருப்பதாகவும், 2006 முதல் 11 வரை தி.மு.க ஆட்சியில் 3 ஆயிரத்து 500 இந்து கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் 825 கோவில்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் .
மேலும் இந்து சமய அறநிலைத்துறை துவக்கப்பட்டு தனியாரிடமிருந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் கோவிலுக்கு சொந்தமாகப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு கோச்சிங் சென்டர் , புத்துணர்வு முகாம் ஆகியவை உருவாக்கப்பட்டதாகும் தெரிவித்து மீண்டும் தி.மு.க ஆட்சி அமைய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
Also Read
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!