Tamilnadu
OLX மூலம் லட்சக்கணக்கில் கல்லாக்கட்டிய மோசடி பேர்வழி சென்னையில் கைது: போலி விளம்பரத்தால் ஏமாந்த மக்கள்!
சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் OLX-ல் பதிவிடப்பட்டிருந்த செல்போன் விற்பனைக்கு என்ற விளம்பரத்தினை பார்த்து அதை வாங்க விளம்பரம் கொடுத்த அப்துல் மஜீத் என்ற நபரை சித்ததிரிப்பேட்டையில் சந்தித்து ரூபாய் 10000த்தை கொடுத்து செல்போனை வாங்கி பார்க்கும் போது அது வேலை செய்யாத சீனா மாடல் போன் என தெரிய வந்துள்ளது.
பணத்தைப் பெற்றுக்கொண்டு போலியான செல்போனை கொடுத்ததாக அப்துல் மஜீத் என்பவர் மீது ராஜேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில் அப்துல் மஜீத் என்பவர் OLX செல்போன்களை விற்பது போல தொடர்ச்சியாக பல்வேறு புனைப்பெயர்களில் OLX கணக்குகளில் பதிவிட்டும், மோசடி செயலில் ஈடுபட்டு முறைகேடான வகையில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி சிந்தாதிரிப் பேட்டையில் அப்துல் மஜீத் செல்போன் விற்பனையில் ஈடுபட்டிருப்பதாக ராஜேஷ் கொடுத்த தகவலைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அப்துல் மஜீத்தை கைது செய்து அவரிடம் இருந்து திருட்டு செல்போன்கள் சிம்கார்டுகள், மெமரி கார்டுகள், ஆகியவற்றை கைப்பற்றினர்.
மேலும், கைது செய்யப்பட்ட அப்துல் மஜீத் ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!